![]() |
கொசுக்களுக்கு புகலிடமாக மாறும் வாய்க்கால்!
Cmp நியூஸ்
அக்டோபர் 11.19
ஊரில் உள் பகுதியில் இருக்கும் cmp வாய்க்கால்.
ஊரில் உள்ள முக்கிய குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்களாக இருக்கிறது.
சரியாக தூர் வாரப்படாமல் வாய்க்காளின் நிலைமை மாறிவிட்டது.
சில இடங்களில் வாய்க்கால்
இருந்ததற்கு அடையாளம் இல்லாமல் தரையோடு தரையாக உள்ளது.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கலந்து சாக்கடையாக நீர் அதிலேயே தங்கி விடுவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகுவதற்கு இலகுவாகிறது.
மழை காலமாக இருப்பதால் வாய்க்காளின் இரு புறங்களிலும் செடிகள் வளர்ந்து புதர்கள் களாக காட்சி அளிக்கிறது.
இரவு நேரங்களில் பூச்சிகள் மற்றும் பாம்பு குட்டிகளும் தென்படுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளார்கள்.
மாலை நேரத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கு கொசுக்கள் புகுவதால் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
நோய்களை உருவாக்கும் புகலிடமாக திகழும் இந்த cmp வாய்க்காலை சுத்தம் செய்து , அத்துடன் வளர்ந்து வரும் செடிகளை அப்புற படுத்து மாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.
ஒரு பக்கம் நாய்கள்தொல்லை.
மறுபக்கம் கொசுத் தொல்லை.
எந்த பக்கம் போனாலும் ஏதாவது ஒண்ணு விட மாட்டேங்குது.
ஆகவே இது சம்பந்தமாக
தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கும் ,
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ,
அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கும்
தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அத்துடன் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.
நமது வாய்காலை சுத்தமாக வைப்போம்.
ஆரோக்கியமாக வாழ சுற்று புரங்களை சுத்தமாக வைப்போம்.
வரும் முன் காப்போம்.
மக்களின் சேவையில்...
Cmp,புதுமனை சகோதரர்கள் வாட்சப் குழு.
0 Comments