ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த கும்பல்; துப்பாக்கிச்சூடு


தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் பற்றி எரிகிறது, துப்பாக்கி சூடு ,பொது மக்கள் 3 பேர் பலி.

தூத்துக்குடி; தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

கூட்டம் கூட்டமாக பலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், திண்டுக்கல், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு 10 கம்பெனி போலீசார் விரைந்துள்ளனர்


100 வது நாள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம். இன்று மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர்.


























நேரடியாக

HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments