மாஸ்கோ: ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடியை , அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வரவேற்றார்.
ஷாங்காய், ஒத்துழைப்பு அமைப்பு, மற்றும் பிரிக்ஸ் ஆகிய உச்சி மாநாடுகள் நடக்க உள்ளன. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையொட்டி ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி சோச்சி மாகாணத்தில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது இருவரும் பரபஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினர் நாடாக இணைய ரஷ்யா தனது ஆதரவை தெரிவிக்கும் என அதிபர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மோடியை ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பங்கஜ் சரண்,, மற்றும் சோச்சி நகர மேயர் ஆனேடோலி பொகார்மேவ் ஆகியோர் வரவேற்றனர்.மோடி,புடின் ஆகியோர் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
0 Comments