அதிராம்பட்டினம், மே 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளிவிழா ஆண்டின், 15 வது திருக்குர்ஆன் மாநாடு புதுமனைத்தெரு, முஹையித்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு, சென்னை, உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஜே அப்துல் ரஜாக் தலைமை வகித்து, வெள்ளி விழா ஆண்டு மலர் முதல் பிரதியை வெளியிட, திருக்குர் ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் பெற்றுக்கொண்டார்.p pppPOpoooP
அதிரை பைத்துல்மால் புரவலர் ஹாஜி என்.சைபுத்தீன், சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் தலைவர், ஹாஜி முஹம்மது ஹஸன், சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முகம்மது அபூபக்கர், பெரிய ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி எம்.எம்.எஸ்.தாஜுதீன், ஏ.ஜே.ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி ஏ.எம்.கே.முஹம்மது அமீன், டாக்டர் எம்.எஸ்.முஹம்மது மீராசாகிப், அமெரிக்கன் அதிரை ஃபாரம் தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், அதிரை அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி. தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி, “இறைமறை காட்டும் இல்லற வாழ்வியல்” என்ற தலைப்பிலும், சென்னை, பாலவாக்கம் ஜாமிஆ மஸ்ஜித், தலைமை இமாம், மவ்லவி. ஏ. அபூபக்கர் உஸ்மானி, "திருக்குர்ஆன் வலியுறுத்தும் சமுதாய ஒற்றுமை” என்ற தலைப்பிலும், சேலம், நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி. எம். அபுதாஹிர் ஃபாஜில், பாகவி, தேவ்பந்தி, “இறைமறை கூறும் பொருளாதாரம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர்.
விழாவையொட்டி, வினாடி-வினா, பேச்சுப்போட்டி, குர்ஆன் சூராக்கள் மனனம், கிராத் உள்ளிட்ட இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 3 வயது, 7 வயது, 10 வயது, 15 வயது, 20 வயது ஆகிய பிரிவுகளில் 1400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில், 3 வயது பிரிவில் வென்ற 245 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டன.
முன்னதாக, வண்டிப்பேட்டை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் இமாம், மவ்லவி. எம்.கமருத்தீன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொகுத்து வழங்கினர். வெள்ளிவிழா ஆண்டு சிற்றுரையை பேராசிரியர் நசீருதீன் வழங்கினார். விழா முடிவில், அதிரை பைத்துல்மால்

இணைச்செயலாளர் எச். முகமது இப்ராஹீம் நன்றி கூறினார்.
முதல் நாள் நிகழ்ச்சியில், 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் மற்றும் நிர்வாகிகள், மாநாடு குழுவினர் செய்து வருகின்றனர்.
0 Comments