ரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்த சலுகை ரூ.39 முதல் ரூ.349 வரை பல்வேறு விலைகளில் பல்வேறு திட்டங்களில் அறிமுகமாகியுள்ளன.
மொபைல் தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் குறைந்த விலையில், புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் மாதம் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம் 15-ம் தேதி அறிமுகமாகிறது. இந்த திட்டத்தால் சந்தையில் ஏற்படும் பாதிப்பை சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் இந்தப் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ.39க்கு இலவச காலிங் சலுகையாகவும், எஸ்டிவி பேக்காகவும் வழங்கியுள்ளது ஆனால் இதன் வேலிடிட்டி காலம் 10 நாட்களாகும். இதில் அன்லிமிடட் வாய்ஸ் கால், 100 இலவச எஸ்எம்எஸ், மும்பை, டெல்லி தவிர அனைத்து நகரங்களிலும் ரோமிங் வசதி, இலவச ரிங்டோன் செட் செய்தல் போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
ரூ.99க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அதன் வேலிடிட்டி காலம் 26 நாட்களாகும், இலவச வாய்ஸ் காலிங், இலவச ரோமிங் (மும்பை டெல்லி தவிர்த்து) போன்றவை உள்ளன.
ரூ.319க்கு ரீசார்ஜ் செய்யும் போது, அதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும், ரூ.349க்கு ரீசார்ஜ் செய்யும் அதன் வேலிடிட்டி காலம் 54 நாட்களாகவும், ஆனால், இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி இலவச டேட்டா தரப்படுகிறது என பிஎஸ்என்எல் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments