ஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்து போது ஜன்னல் கழன்று விழுந்ததால் பரபரப்பு (வீடியோ)


அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்குச் (Amritsar to Delhi) சென்ற ஏர் இந்தியா 787 ட்ரீம்லைனர் மாடல் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி விமானம் சுமார் 15,000 உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கழன்று விழுந்ததால் சுமார் 12 நிமிடங்கள் விமான தொடர்ந்து குலுங்கி பயணிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது. இந்த நடுவான் சம்பவத்தால் 3 பயணிகள் காயமடைந்தனர். விமானப் பணிப்பெண் ஒருவர் கடும் பிரயாத்தனங்களுக்குப் பிறகு தற்காலிகமாக விழுந்த கண்ணாடி ஜன்னலை மீண்டும் பொருத்தியதை தொடர்ந்து விமானம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த வாரம் முழுவதும் பல விமானங்கள் பல்வேறு வகையான விபத்துக்களை சந்தித்திருந்த வேளையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டல்லாஸ் நகருக்கு பறந்து கொண்டிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் போயிங் 737 மாடல் விமானத்தின் எஞ்சின் ஒன்று வெடித்து சிதறியதில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ஒன்றும் நொறுங்கியது. இந்த ஜன்னல் வழியாக ஜெனீபர் ரியோர்டன் என்ற பெண் பயணி ஒருவர் அழுத்தத்தால் பாதி உடலுக்கு மேல் வெளியே இழுக்கப்பட்டார் எனினும் சக பயணிகள் அவர் முற்றிலும் வெளியே சென்றுவிடாமல் மீண்டும் விமானத்திற்குள் இழுத்து காப்பாற்றினர் என்றாலும் அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் மற்றும் அதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்

.






 

Post a Comment

0 Comments