காவிரி விவகாரம்ஏப்ரல் 5 பெட்ரோல் பங்க், பேருந்து ஸ்ட்ரைக்!

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. தற்போது திமுக அறிவித்துள்ளா போராட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது. வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழ்நாடு பெட்ரோல் பங்க்குகளின் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், போக்குவரத்து தொழிற்சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 5 ஆம் தேதி பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது, அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தொழிற்சங்கங்கள் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்துள்ளது. மேலும், ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளர்கள் முழு ஈடுபாட்டோடு பங்கேற்று தமிழர்களின் வாழ்வுரிமை போராட்ட வெற்றிக்கு துணை நின்றிட வேண்டுகிறோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்.
      HASHIM
       STATEXPRESS

    statexpress256@gmail.com

Post a Comment

0 Comments