தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பங்கஜவல்லியின் மகள் பானுப்பிரியா இவர் கணவனை இழந்தவர். இவருக்கு 3 வயதில் ஹர்னிகா என்ற குழந்தை உள்ளது. தன்னுடைய குடும்ப சூழல் மற்றும் இயலாமை காரணமாக இருந்த இவரை, செல்வி என்ற பெண் தொடர்பு கொண்டு மலேசியாவிற்கு நீ ஹோட்டல் வேலைக்கு சென்றால் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையை காண்பித்து கடந்த வருடம் நவம்பர் 23ம் தேதி எந்தவித செலவுயின்றி மலேசியாவுக்கு பானுப்பிரியாவை அனுப்பி வைத்தார். அங்கு வசந்தா என்ற பெண் மலேசியாவில் அழைத்து கொண்டார். மலேசியா சென்று மூன்று நாட்களில் வசந்தா என்ற பெண், பானுப்பிரியாவை சுமார் 3000 வெள்ளிக்கு சீனா காரர்களிடம் பாலியல் தொழிலுக்கு விற்று விட்டார். ஆனால் பானுப்பிரியாவோ அங்கிருந்து பல போராட்டங்களுக்கு பிறகு எந்தவித தப்பு நடப்பதற்கு முன்பாகவே சுவர் ஏறி தப்பித்து விட்டு, மலேசியாவில் வேலை பார்க்கும் SDPI கட்சி நிர்வாகிகளை பார்த்துள்ளார். மேலும் தஞ்சையில் அந்த பெண்ணிண் பெற்றோர்களும் SDPI கட்சியை நாடி மீட்டெடுக்குமாறு மனு அளித்தனர். மேலும் மலேசியாவில் காவல்துறையை நாடி பின்பு மலேசிய அரசாங்க விடுதியில் தங்க வைக்கப்பட்டார். சுமார் மூன்று மாதங்களாக பலவிதமான சட்ட திட்டங்கள் மூலமாக அந்த பெண்ணை இந்தியா அழைத்து வர SDPI கட்சி நிர்வாகிகள் முயற்சி செய்து இன்று திருச்சிக்கு சுமார் 9 மணியளவில் AIR ASIA விமானத்தில் அனுப்பி வைத்தனர். 11 மணியளவில் திருச்சிக்கு வருகை தந்த பானுப்பிரியாவை திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், தஞ்சை மாவட்ட நிர்வாகிகளும் வரவேற்றனர். திருச்சி மாவட்ட செயலாளர் imamR. ஹஸ்ஸான் மற்றும் PRO மஜித் அவர்கள் வரவேற்று தஞ்சை மாவட்ட தலைவர் #இலியாஸ் மற்றும் WIM மாநில செயலாளர் #சபியா அவர்களிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணே_முன்வந்து இதுபோன்று மற்ற பெண்களுக்கும் நடக்ககூடாது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் SDPI கட்சி நிர்வாகிகளுடன்பத்திரிக்கையாளர்களை சந்தித்த பானுப்பிரியா இது போன்று இன்னும் ஆந்திராவை சேர்ந்த மூன்று பெண்களும், செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் அந்த விடுதியில் இருக்கின்றனர். அந்த பெண்களையும் மீட்டெடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இது சம்மதமாக அடுத்தகட்டமாக புகார் அளிக்கவும் உள்ளார். சட்ட ரீதியாக உதவி செய்ய SDPI கட்சி அவருடன் துணையாக இருக்கும்.உடன் தஞ்சை மாவட்ட நிர்வாகியான நிஜாம், திருச்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுஹைப் அவர்களும், ஏர்போர்ட் கிளையை சேர்ந்த நிர்வாகிகளான முத்தலிப், மன்சூர், டோல்கேட் நிர்வாகிகளான பாஷா, பெரோஸ் மற்றும் கேகே நகர் நிர்வாகிகளான இம்தியாஸ் அவர்களும் மற்றும் பலரும் உடனிருந்தனர்.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
0 Comments