இலங்கையிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளிடம் சுங்கத்துறையினர் மேற்க்கொண்ட சோதனையில் கொழும்பு நகரைச் சேர்ந்த முகமது ரிண்டி என்பவர் ரூ 9.லட்சம் மதிப்பிலான 309 கிராம் தங்கமும், முகமது ரிம்ஸி என்பவர் ரூ 18 லட்சம் மதிப்பிலான 600 கிராம் தங்க நகைகளும் தங்களது உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்ததது அதேபோல புதன்கிழமை சார்ஜாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயைகளிடம் நடத்திய சோதனையில் ரூ 10.லட்சம் மதிப்புள்ள 360 கிராம் மதிப்புள்ள தங்கத்தை பயணி ஒருவர் தனது உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது மேலும் மலேசியாவிலிருந்து வந்த மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளிடம் மேற்கொண்டசோதனையில் இரு பயணிகள் தலா 600 கிராம் ரூ .12 லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்ததது .அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களில் ரூ .51 லட்சம் மதிப்பிலான 1,660 கிராம் தங்கம் பறிமுதல் செயப்பட்டுள்ளது ,இது தவிர சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை அதிகாலை வந்த டைகர் ஏர்வேஸ் விமானப் பயணி ஒருவரிடம் சுமார் ஓன்றரை கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அதுகுறித்து இன்னும் உறுதிசெய்யவில்லை .

0 Comments