இதற்கிடையே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் உயர்கல்வி, தொழிற்கல்வி உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண், அடிப்படையாக இருக்கும் என்ற காரணத்தால், பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நாட்கள் கடந்து விட்டதாலும், கொரோனா கட்டுக்குள் வராததாலும், தேர்வு நடப்பது சந்தேகம் என்ற பேச்சும் எழுந்தது.
இதற்கிடையே பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தினார். இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி மொழிப் பாடமும், 3-ஆம் தேதி ஆங்கிலமும், 5-ஆம் தேதி கணிதமும், 6-ஆம் தேதி விருப்ப மொழி தேர்வும், 8-ம் தேதி அறிவியலும், 10-ஆம் தேதி சமூக அறிவியலும், 12-ஆம் தேதி வொக்கேஷனல் தேர்வும் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 11-ம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு ஜூன் 2-ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை வேளையில் நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வின்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தேவையான விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments