அதிரைவாழ் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய SDPI கட்சி அதிரை நகரம்.


இந்தியா முழுவதும் கொரொனா வைரஸ் பரவலின் காரணமாக  பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில்
SDPI கட்சி பல மக்கள் நல பணிகளை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று அதிரைவாழ் மக்களுக்கு SDPI கட்சி அதிரை நகரம் சார்பாக முதல் கட்டமாக 32 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு
மாவட்ட தலைவர் முகமது புஹாரி, SDPI கட்சியின் நகர தலைவர் N.M.S.ஷாபிர் அஹமது, SDPI கட்சியின் நகர செயலாளர் ஷாகுல், மற்றும் SDPI கட்சியின் நகர செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் ஆகியோர்  உணவுப் பொருட்களை  வழங்கினர்.

  இவண்,
 SDPI கட்சி ஊடக பிரிவு,
 அதிரை நகரம்.

Post a Comment

0 Comments