திருச்சி ஏர்போர்ட்டில் பார்க்கிங் கொள்ளை!மக்களே..உஷார்..உஷார்!!


 திருச்சி ஏர்போர்ட்வாயிலில் ஒரு போக்குடன் சிலர் நின்று வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் செய்துகொண்டிருப்பார்கள். இதனை அங்கு செல்லும் அனைவரும் பார்த்திருப்போம்.
ஏர்போர்ட் செல்லும் அனைவரும் அவர்களுக்கு கப்பம் காட்டாமல் செல்ல முடியாது.
ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் உங்களிடம் வசூலிப்பது 5நிமிடங்களுக்கு மேல் நீங்கள் உங்கள் வாகனங்களை அந்த பார்க்கிங்கில் நிறுத்தினால் மட்டும் கொடுக்க வேண்டிய 40,60,80 என்ற தொகையை, மாறாக ஏர்போர்ட் வரும் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கும் கொள்ளை கூட்டம் தான் அது…
இனியாவது விழித்துக்கொள்ளுங்கள் மக்களே, நீங்கள் உடனே இறக்கிவிட் செல்பவர்கள் என்றால் அவர்களிடம் 5நிமிடத்திற்கான ஒரு சிலிப்பை மட்டும் வாங்கி கொள்ளுங்கள், 5நிமிடம் மேல் நீங்கள் அந்த பார்க்கிங்கில் நின்றால் வெளியேறும் பகுதியில் இருப்பவர்களிடம் பணம் கொடுத்து பார்க்கிங் சிலிப் வாங்கிவிட்டு வெளியேறிவிடலாம்.
நீங்கள் வாகனங்களுடன் ஏற்ற வருபவர்கள் என்றால் அவர்களை ஏர்போர்ட் பகுதியில் இறக்கிவிட்டு விட்டு உடனே வெளியேறி ஏர்போர்ட் வெளியே காத்திருந்தாள் நீங்கள் 5நிமிடம் வாங்கிய சிலிப் மட்டுமே போதும்,
இறக்க வருபவர்கள் என்றால் 5நிமிடத்திற்குள் இறக்கிவிட்டு விட்டு நீங்கள் வெளியேறிவிடுங்கள்.
இதனை சொல்லாமல் வருபவர்கள் அனைவரிடமும் அங்குள்ள பார்க்கிங்க் பணியாளர்கள் வசூலிப்பது மிகப்பெரிய கொள்ளை அல்லவா…?
மேலதிக விபரங்களுக்கு பார்க்கிங்க் சூப்ரவைசர் கிருஷ்ணன் : 9655506383
(கொசுறு தகவல் : ஏர்போர்ட் பார்க்கிங் பகுதியில் உங்கள் வாகனங்களில் விலையுயர்ந்த பொருட்களை விட்டு செல்லாதீர்கள், கள்ள சாவி போட்டு வாகனங்களை திறக்கும் திருடர்கள் அதிகம் உலாவருவதாக தகவல்..
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments