
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, நாப்கின் எரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 900 க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயில்கின்றனர். மாணவியர் அதிகம் பேர், கிராமங்களில் இருந்து வருகின்றனர். எனவே, பள்ளியில் மாணவியர் பயன்படுத்தும் வகையில், நாப்கின்களை சுகாதாரமான முறையில் எரிக்க பயன்படும், ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான நாப்கின் இயந்திரம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், பள்ளித் தாளாளர் ஹாஜி எஸ்.ஜெ அபுல் ஹசன் முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியை சுராஜிடம் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க மாவட்ட நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, மாவட்டத் தலைவர்கள் சாரா எம். அகமது, எம்.சாகுல் ஹமீது, எம்.நிஜாமுதீன், என். ஆறுமுகச்சாமி, ஆர். செல்வராஜ், எம்.ஏ அப்துல் ஜலீல் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனர்.


0 Comments