மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நிறைவு: நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர்

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், ஒரு திருநங்கையும் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் சுமார்  1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு  எழுதினர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட பிரிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு மையங்களுக்குள் காலை 7.30 மணி முதல் மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.. 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments