
பள்ளியின் வயது பல நூற்றாண்டு.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்புள்ள சகோதரர்களே! நேற்று 03/04/2018 செவ்வாய் கிழமை தஞ்சை குடல் சிறப்பு மருத்துவர் S.நரேந்திரன் அவர்களி கிளீனிக்கு ஆலோசனை செய்வதற்க்காக சென்றிருந்தேன்.
காலையிலேயே போனதால் அவர் சாயிந்தரம் தான் பார்வை நேரம் என்றதும் .
எதிரே இராஜ ராஜ சோழ மன்னர்கள் அரன்மனை உள்ளதால் அங்கு போய் அமந்திருந்தோம்.
லுஹர் வக்து தொழுகைக்கு அழைப்பொழி பாங்கு சப்த்தம் காதில் பாய்ந்தது.
அரன்மனைக்கு நான் பல முறை போய் இருந்தாலும் பின் புறமாக பள்ளி இருப்பது நேற்று வரையிலும் தெரியாமல் போனது துரதிஷ்ட்டம்.
பாங்கு சப்த்தம் கேட்டதும் மாற்று மத சகோதரியிடம் இங்கு பள்ளிவாசல் எங்கு உள்ளது என்று கேட்டன் பின் புறமாக மார்க்கெட்டில் உள்ளது என்றது.
குறுக்கே செல்ல கேட்டு உள்ளதால் அதன் வழியாக சென்று அல் ஹம்துலில்லாஹ்.
பள்ளியை அடைந்து லுஹர் தொழுது விட்டு மீண்டு அஸர் தொழுகையையும் முடித்தோம்.
அந்த பள்ளி இருக்கும் இடத்தில் ராஜாவின் குதிரை கட்டப்படும் இடமாம்.
அப்போ ராஜவுக்கு குதிரை வண்டி ஓட்டியது ஒரு முஸ்ஸல்மானாம் அதாவது நான்கு தலை முறைக்கு முன்பு.
குதிரை கட்டப்பட்ட இடத்தில் ராஜா தனக்கு குதிரை வண்டி ஓட்டிய விசுவாசத்தின் காரணத்தால் ஒரு பள்ளியை கட்டிக் கொடுத்திருக்கிறார்.
அந்த பள்ளி தான் இன்றும் கம்பீரமாக பல நூறு ஆண்டுகளை கடந்தது பறைச் சாட்டுகிறது பள்ளி சிறியவையாக இருந்தாலும் வெயிலின் உச்சக்கட்ட உஷ்னமான வேலையிலும் மின் விசிறி சுழலாமலும் குளிர்ச்சியாகத்தான் இருந்தது.
இப்பள்ளி ஐய்யன் கடைத் தெருவில் உள்ளது அந்த பகுதி முழுவதும் மாற்று மதத்தவர்கள் தான் சூழ இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மக்கள் நான்கு, ஐந்து குடும்பம் தான் இருக்குதாம் அதுவும் பிரிந்து இருக்கிறார்களாம்.
இஸ்லாமிய மக்கள் நான்கு, ஐந்து குடும்பம் தான் இருக்குதாம் அதுவும் பிரிந்து இருக்கிறார்களாம்.
இங்கு தொழவருவோர்கள இமாமும்,மோதினாரும் இன்னுமொறு கறிக்கடை ஹாஜியாரும் தானாம் இமாம் அஸர் தொழுகைக்கு வர மாட்டாராம் ஃபாத்திஹா ஓத போய்டுவாராம்.
சில நேரங்களில் மோதினார் மட்டும் பாங்கு சொல்லி அவர்மட்டும் தொழுவிடுவாராம்.
ஜும்மாவுக்கு மட்டும் 40, 50 பேர் கூடுகிற முஸ்லிம்கள் மற்ற வக்துக்கு வராதது பெறும் கவலையை ஏற்ப்படுத்துகிறது.




HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
0 Comments