ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்து விபத்து!

ஹைதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்க முயற்சித்தபோது டயர் வெடித்ததால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஆயினும் விமான நிலையத்திற்கு அவசர தகவல் அனுப்பப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதனால் விமானத்தில் இருந்த நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் உயிர்தப்பினர். விபத்து காரணமாக ஓடுதளம் மூடப்பட்டதையடுத்து 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். பின்னர் பயணிகள் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments