அதிரை எக்ஸ்பிரஸ்::- தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுக்க இருக்கும் சார் பதிவாளர் அலுவலங்கங்களில் பொதுவாக நிறைய இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மூலமாக எளிதாக வேலை முடிந்துவிடும் என்பதால் மக்களும் இவர்களை அதிகம் அணுகுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சொத்து விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு மட்டுமே அலுவலகங்களில் அனுமதி அளிக்கப்படும். இந்த தடைச்சட்டம் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் இடைத்தரகர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் காவல் துறையினர் மூலம் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
0 Comments