சி எம் பி லைனில் அதிரை பேரூராட்சி துப்புரவு ஊழியர்களால் அடிக்கடி குப்பைகளை எரித்து விடப்படுகிறது.
பறந்து விரிந்த சி எம் பி வார்டுக்கு பெரிய குப்பை வண்டி விடாமல் சிறிய வண்டி விட்டு தொட்டியில் உள்ள குப்பகளை மட்டும் அள்ளி விட்டு ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எரித்து விட்டு செல்கின்றனர் துப்பரவு ஊழியர்கள்.
இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு பெரும் சிரமத்தை கொடுப்பது மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு மூச்சு திணரலை ஏற்ப்படுத்துகிறது.
பல முறை இது விசயமாக பேரூராட்சிக்கு சுட்டிக்காட்டியும் இது போன்று ஈனச் செயல்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற செயல்களுக்கு அதிரை பேரூராட்சி முற்று புள்ளி வைக்குமா?
0 Comments